Friday, July 5, 2013

The Visionay Leader...

I read this article on "Kamaraj" in facebook. Wanted to share it here.

எத்தனை பேருக்கு தெரியும் இந்த சிறந்தமனிதர் சாதனை?

காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் ... காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் தன்முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார். அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்
கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்! நிதிப் பற்றாக்குறை, அரசாங்க கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப் பிச்சைக் கார மாநிலமாக முன்னிருத்தினார்.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிர்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித்
தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்புர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்
தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை

இவை மட்டுமா?
மணிமுத்தாறு , ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, காவிரி டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!


அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14. 


159 நூல் நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள்,  6 உரத் தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை, கிண்டி,விருதுநகர்,அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை,மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர்,திருச்சி...என்று.
தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.


மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே...! காமராஜ் ஆட்சி புரிந்தது 9
ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட் ள்ளன). அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்.....இந்தியாவிலெயே தொழில்வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..? இல்லை
"இலவச"த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..?


When I read this I feel so sad.......that we have become so insensitive that we do not recognise the difference between an administration with a long term vision, that will make all of us be self-dependent.......and an administration that has plans only to make us all dependent on someone always.....and make us all self-centred. 

Atleast we can stop fooling us....that our 'leaders' are doing their best..........We need not blame anyone for not being a visionary. But at least can't we realize that there is something called a 'vision', which is not there at all now....and all what is there is lots of laziness which always pushes us to seek everthing for free.....We are so happy with the free TV, mixie, fans and laptops.....How shameless we are! 

Do we even realize where are we heading towards? 

And for all those people who want to tell me that, "It is easy to sit and talk or blog, it is easy to criticize others.....", I have only one thing to say....... realizing that there is a crisis is the first step to even make attempts to solve it. If  we just fool around saying everthing is alright, I don't think we can ever see light......!

The movie on Kamaraj that was released in 2004 is really very touching...depicting his life..If interested, watch it here:
http://www.youtube.com/watch?v=X9RORemfBBk

This great leader, it seems, just had Rs.12/- when he died......Why talk about comparing him with today's politicians. Can anyone even stand near him???

வலிமையும் எளிமையும் சேர்ந்த ஒரு மாமனிதர்!

No comments:

Post a Comment